WEB LINK

Monday, September 10, 2012

துளிர்/ஜந்தர் மந்தர் வினாடி வினா-விழா-செயலாக்கம்-8


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-குரோம்பேட்டை & தாம்பரம் கிளைகள் நடத்திய துளிர் / ஜந்தர் மாந்தர் வினாடி வினா பரிசளிப்பு விழா...

இடம்: ஜெயகோபால் கரோடியா தேசீயப் பள்ளி, பாரதமாதா தெரு, கிழக்குத் தாம்பரம். 
நாள்: 08-09-2012 சனிக்கிழமை. நேரம் : காலை 9 - 00 மணிமுதல். 

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தென்சென்னை - 2011 -ஆம் ஆண்டு தேசீய அளவில் பங்குபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கு மற்றும் 2012 -ஆம் ஆண்டு துளிர் / ஜந்தர் மாந்தர் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவினை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் கிளைகள் இணைந்து, கடந்த 08 - 09 - 2012 - சனிக்கிழமை காலை 9 -00 மணியளவில், சென்னை, கிழக்குத் தாம்பரத்தில், பாரதமாதா தெருவில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா தேசீய பள்ளியில் நடத்தினர்.


பரிசளிப்பு  விழா அழைப்பிதழ் கிடைக்கப்பெற்று கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அறிவியல் இயக்கக் கிளை அங்கத்தினர்கள் அனைவரும் பள்ளி கலை அரங்கத்தில் காலை 9-00 மணியளவில் குழுமிய உடன், நிகழ்வுகள் துவங்கின. தாம்பரம் கிளைத்தலைவர்  திரு. சி.பி.ராமச்சந்திரன் அவர்கள், தென்சென்னை தலைவர், திரு. சி.ராமலிங்கம் அவர்களை நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடத்தி தர அழைப்பு விடுக்க, நிகழ்வுகள் இனிதே துவங்கின.
  

நிகழ்வுகள்:

அறிவியல் இயக்கப் பாடல்கள் : திரு. எ.இளங்கோ அவர்கள், செயற்குழு உறுப்பினர், குரோம்பேட்டை கிளை.

தலைமை: திரு. சி.ராமலிங்கம் அவர்கள், தலைவர், தென்சென்னை அறிவியல் இயக்கம்.

வரவேற்புரை: திரு.உதயன் அவர்கள், துணைத் தலைவர், தென்சென்னை அறிவியல் இயக்கம்.

இளம் விஞ்ஞானிகளை அறிமுகம் செய்து பாராட்டுதல்: திரு. எஸ். சக்திவேல், பொருளாளர், தென்சென்னை அறிவியல் இயக்கம்.

விஞ்ஞானியுடன் ஒரு சந்திப்பு: திருமிகு.டாக்டர். இந்துமதி அவர்கள், கணித அறிவியல் நிறுவனம், IMSC, தென்சென்னை.

அறிவியல் இயக்கம் இதுவரை: திரு. ஜெகதீசன் அவர்கள், செயலர், தென்சென்னை அறிவியல் இயக்கம்.

இளம் விஞ்ஞானிகளைப் பாராட்டி பரிசளிப்போர்:

திரு. இராஜேந்திரன் அவர்கள், இணைச் செயலர், ஜெயகோபால் கரோடியா தேசீயப் பள்ளி.
திருமிகு.மீனாட்ஷி நித்தியா சுந்தர் அவர்கள், தாளாளர், பாரதி வித்யாஸ்ரம்.
திரு. சி.ராமலிங்கம் அவர்கள், தலைவர், தென்சென்னை அறிவியல் இயக்கம்.
திரு.உதயன் அவர்கள், துணைத் தலைவர், தென்சென்னை அறிவியல் இயக்கம்.
திரு. ஜெகதீசன் அவர்கள், செயலர், தென்சென்னை அறிவியல் இயக்கம்
திரு.மு.சி.பலராமன், தலைவர், தென்சென்னை அறிவியல் இயக்கம், குரோம்பேட்டைக் கிளை.
திரு.சி.பி.ராமச்சந்திரன், தலைவர், தென்சென்னை அறிவியல் இயக்கம், தாம்பரம் கிளை.
திரு. எ.எஸ்.சுப்பிரமணியன், ஆலோசகர், தென்சென்னை அறிவியல் இயக்கம், குரோம்பேட்டைக் கிளை.
திரு. தா.பி.வரதராசன், ஆலோசகர், தென்சென்னை அறிவியல் இயக்கம், குரோம்பேட்டைக் கிளை.
திரு.கு.ரவிக்குமார் , பேராசிரியர், தென்சென்னை அறிவியல் இயக்கம்.
திருமிகு.கவி கௌசிக் அவர்கள், உறுப்பினர்,தென்சென்னை அறிவியல் இயக்கம், குரோம்பேட்டைக் கிளை.

நன்றியுரை: திருமிகு.எம்.டி.சுருதி, செயலர், தென்சென்னை அறிவியல் இயக்கம், தாம்பரம் கிளை.
=============================================



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளை நடத்திய, துளிர், ஜந்தர் மந்தர் வினாடிவினா -28-07-2012, வினாடி வினா நிகழ்வுகளை காண சொடுக்குக-இணைப்பினை:  http://tnsfchrompet.blogspot.in/2012/08/3_27.html
=============================================

மீண்டும்  சந்திப்போம் !!! 
அன்புடன்...
AND.கிருஷ்ணமூர்த்தி.
(tnsfchromepet/Treasurer.)

No comments:

Post a Comment