தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - வருடா வருடம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டி அமைக்கப்பட்ட துளிர் இல்லங்களின் அங்கத்தினர் களில் ஆர்வமுள்ளவர்களைக் குழுக்களாக பதிவு செய்து, அவர்களின் அறிவியல் ஆய்வுகளை பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் அறிவியல் ஆய்வறிக்கைகளை மேல்நடவடிக்கைக்காக தேசீய அளவில் பரிந்துரைக்கின்றது.
இவ்வாறு சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள், தேசீய அளவில் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட குழுக்களின் விளக்கங்களைக் கேட்டு அறிந்த பின் பரிசு/சான்றிதழ் வழங்க தேர்ந்தெடுக்கப் படுகின்றது. அவர்களை விஞ்ஞான அறிவியல் துறையைச் சார்ந்த மத்திய அரசு கட்டமைப்பு " இளம் விஞ்ஞானி" என்று பட்டம் வழங்கி கௌரவித்து, சான்றிதழ்களும் மேலதிக ஆய்வுகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்குகின்றது.
இந்த வருடம் வழங்கப்பட்ட தலைப்பு:
"ENERGY" - "ஆற்றல்"
ஆர்வமுள்ள பள்ளிகளும், பெற்றோர்களும், வருங்கால விஞ்ஞானிகளை உருவாக்க முன்வரவேண்டும் !! இதனை தனது குறிக்கோள்களின் ஒன்றாக செயல்படுத்தும் அறிவியல் இயக்கம் - தென்சென்னை சார்பாக அனைவரையும் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம். !!!
ஆற்றல் எத்தனை வகைப்படும் ?
அதில் ஒன்றுதான் காந்த சக்தி !!! "மின் காந்த சக்தி" !!!!
விளையாட்டாக பார்த்தால் விளையாட்டுதான் இது !!
அதனை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் புதிர் புரிய வரும்.
விளையாட்டும், வேடிக்கையும், விநோதமும் நமது வாழ்வில் ஒரு அங்கமே ! ஆயினும் அறிவியல் சிந்தனையுடன் நாம் கவனித்தால் இந்த அண்டமும் நமது கையில் வந்து விடுகின்றது !! இப்பதிவு மேலும் விளக்கங்களுடன் மேன்மைப் படுத்தப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
அண்ட்.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet
No comments:
Post a Comment