WEB LINK

Monday, September 10, 2012

அறிந்து கொள்வோமே - இயற்பியலின் பிரிவுகள்.

இயற்பியலின் பிரிவுகள் 

இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு: சொடுக்குக விரிவான விளக்கங்களுக்கு:

 எந்திரவியல், இயக்கவியல், நிலையியல், ஒலியியல், ஒளியியல், பாய்ம இயக்கவியல், வெப்ப இயக்கவியல், மின்காந்தவியல், நிலைமின்னியல், மின்னோட்டவியல், காந்தவியல், அணு இயற்பியல், அணுக்கரு இயற்பியல், மட்டுவ இயற்பியல், வானியல், அண்டவியல், புவி இயற்பியல்.

இயற்பியல் அளவுகளும் பரிமாணங்களும்

நேரடியாகவோ பிற வழிமுறைகளின் மூலமாகவோ அளவிடப்படும் இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒரு பொருள் ஒன்றின் நீளம், அகலம், உயரம், நிறை ஆகியவை பொருத்தமான அளக்கும் கருவிகளினால் அளக்கப்படக்கூடியவை. எனவே இவை அடிப்படை அளவுகள் என அழைக்கப்படும். அப்பொருளின் பரப்பளவு, கன அளவு, அடர்த்தி போன்றவற்றை கணித்தல் சமன்பாடுகள் மூலம் பெறக்கூடியவையாகும். இவை வழி அளவுகள் எனவும் அழைக்கப்படும். அடிப்படை அளவுகள் நீளம், காலம், நிறை, மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு, பொருளின் அளவு ஆகிய ஏழு ஆகும். வழி அளவுகள் வேகம், முடுக்கம், விசை, வேலை, ஆற்றல், பரப்பளவு மற்றும் பல.
======================================================= 
மேலும் பயணிப்போம் 
இனிய நண்பர்களே !! 




அன்புடன்
AND .கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet

No comments:

Post a Comment