WEB LINK

Monday, September 10, 2012

அறிந்து கொள்வோமே-வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!


வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது.
இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.



கணக்கதிகாரப் பாடல் : 50 

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்:

விட்டம்தனை விரைவாயிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r
(விட்டம் = 2r ); மட்டு நாண் மாதவனில் மாறியே = 4 ஆல் பெருக்கு; எட்டதனில் ஏற்றியே = 8 ஆல் பெருக்கு; செப்பியடி = 20 ஆல் வகு.

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r = 2 ( 16/5) r = 2 π r

இங்கு π = 16 / 5 = 3.2  ( இது ஓரளவுக்குத் துல்லியமான தோராயமே ) இன்று நாம் பயன்படுத்தும் வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

------------------------------------------------- 
மேலும் பயணிப்போம் 
இனிய நண்பர்களே !! 






அன்புடன்
AND .கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet 

No comments:

Post a Comment