WEB LINK

Monday, September 10, 2012

அறிந்து கொள்வோமே-சார்பியல் தத்துவத்துக்கு நூறு வயது

சார்பியல் தத்துவத்துக்கு நூறு வயது

ஆல்பர்ட் ஐயன்ஸ்டின் தனது சார்பியல் தத்துவத்தை உலகுக்கு அறிவித்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒலிப்  பெட்டகத்தை சொடுக்கி சார்பியல் தத்துவத்தை ஆங்கிலத்தில் கேட்கலாமே !!!
E = MC square என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐயன்ஸ்டின் உணர்தினார்.
E = MC square என்ற சமன்பாட்டில் மிகச் சிறிய துகள்களில் இருந்து கூட பெரும் சக்தியைப் பெறலாம் என்பதை புரிந்து கொள்ளலாம், அதேபோல மிகப் பெரிய சக்தியை சிறிய துகள்களில் அடைக்கவும் முடியும். என்பதை E = MC square என்ற சமன்பாட்டின் மூலம் ஐன்ஸ்டின் விளங்கப்படுத்தினார்.
ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் மிகவும் புரட்சிகரமானவை. எந்த அளவுக் கென்றால், இதன் காரணமாக நாம் அதுவரை வெளி மற்றும் காலத்துக் கிடையேயான உறவு குறித்து பேணி வந்த பல கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டியாதனது.

ஐன்ஸ்டைனின் தத்துவம்மேலும் பல புதிய விஷயங்களை சொல்கின்றன... ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கடிகாரம் சாதாரணமாக இருக்கும் ஒருவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்று தெரிவிக்கின்றன.இதன் காரணமாக தூரமும் பாதிக்கப்படும் . ஒளியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு காரை ஒருவர் ஒட்டிச் சென்றால், அவர் செல்லும் தூரம் குறைவாக இருப்பதாக சாதாரணமாக இருப்பவருக்குப் படும். ஆனால் கார் ஒட்டிச் செல்பவர் தூரம் அதிகமாக இருப்பதாகவே உணருவார்.

முரண்பாடுகள் போல தோன்றினாலும் இதுதான் உண்மை.
உண்மை என்பது புனைக்கதைகளை விட சுவாரசியமானது என்ற பழமொழி இங்கு நிருபிக்கப்பட்டுள்ளது.

E = MC square என்ற சமன்பாடுதான் அணு ஆயுதங்கள் உருவாக்கப் படுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஜெர்மனி அணு ஆயுதங்களை உருவாக்க முயலலாம் என்று அப்போதைய அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டிடம், ஐயன்ஸ்டின் தெரிவித்தார். இந்த எச்சரிக்கை அமெரிக்காவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வைத்தது. ஆனால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டவுடன், இது குறித்து ஐயன்ஸ்டின் மிகவும் வருத்தப்பட்டார். மீண்டும் அணு ஆயுதங்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்காக அவர் மிகவும் உழைத்தார்.

சார்பியில் தத்துவம் காரணமாக மிக மிக மோசமான ஒரு ஆயுதம் உருவாக்கப்பட்ட போதிலும், அத்தத்துவும் தான் நவீன இயற்பியலின் துவக்கத்துக்கு அடித்தளமாக உள்ளது. அதுதான் நமது நவீன சமூதாய வாழ்வை சாத்தியமடையச் செய்துள்ளது.

No comments:

Post a Comment