Scientists Announce New Findings on Higgs Boson:
http://www.biography.com/people/stephen-hawking-9331710#synopsis
Stephen Hawking
Physicist, Scientist (1942–)
சேர்ன் அணு ஆராய்ச்சி கூடம்
அணுவுக்கு நிறையை தரக்கூடியவை என்று நம்பக்கூடிய ஹிக்ஸ் போஸோன் எனப்படும் கடவுள் துகள் (நுண் துகள்) உண்மையிலேயே இருக்கின்றன என்பதனை ஜெனிவாவில் உள்ள சேர்ன் ஆய்வு கூட விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
இது வரை மனிதனால் கண்டறியப்படாத பருப்பொருள் (Dark Matter) பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த கூடிய மிக முக்கிய அடிப்படை பரிசோதனையாக இது கருதப்படுவதால் இக்கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் புதிய அத்தியாய தொடக்கமாகியுள்ளது. கடவுள் துகள் (God Particle) கண்டுபிடிக்கப்பட்டதை நாளை உத்தியோகபூர்வமாக சேர்ன் விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கபப்டுகிறது.
சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் உள்ள சுரங்கத்தில் அணுவின் நுண்துகளை (அணுவின் உட்கூறுகள்) பாரிய வேகத்தில் முடுக்கிவிட்டு அவற்றை மோதச்செய்து இதற்கான முடிவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெரும் ஹாட்ரான் மோதி பாதை
கண்ணுக்கு தெரியாத ஒரு புலத்தில் அணுவுக்கு நிச்சயமாக நிறை (பொருண்மை) இருக்கலாம் என்ற கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து நம்பப்பட்டு வருகிறது. கணிதத்தில் X எனும் குறியீட்டை பயன்படுத்தி கணக்குகள் போட்டு இறுதியில் அந்த X இன் பெறுமதி என்ன என்பதை கண்டுபிடிப்பது போன்று, கருதுகோள் அளவில் ஹிக்ஸ் போசன் என நுண்துகளொன்றுக்கு பெயரிட்டு, அதுவே அணுவின் நிறைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கருதி விஞ்ஞானிகள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தனர்.
அப்படி செய்யபப்ட்ட பரிசோதனைகள் வெற்றிபெற்ற போதும், ஹிக்ஸ் போசோன் அணுத்துகள்களை ஆதாரபூர்வமாக நீருபிக்க முடியவில்லை. இவைதான் அந்த ஹிக்ஸ் போசோன் என அவற்றை கையகப்படுத்து வதற்குள் அவை மாயமாகிவருவது இந்த மர்மத்திற்கு காரணமானது.
இந்நிலையிலேயே சுவிற்சர்லாந்தின் சேர்ன் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ல பெரும் ஹாட்ரான் மோதி உதவியுடன், அணுத்துகள்களை மோதவிட்டு அவை பிளவுபடும் போது அங்கு ஹிக்ஸ் போசோன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான வீடியோ தொகுப்பு (ஆங்கிலத்தில்)
Scientists Announce New Findings on Higgs Boson
No comments:
Post a Comment