WEB LINK

Sunday, September 2, 2012

அறிந்து கொள்வோமே அறிவியலை - பதிவு -001

ரோவர் விண்வண்டி
அறிந்து கொள்வோமே !! அறிவியலை.!!! செவ்வாய் கிரகத்தில் நாமும் நடை பயிற்சி செய்வோமே !!

 உடல் நலம் பேணும் ஒவ்வொருவரும், மேற்கொள்ளும் எளிய பயிற்சி நடை பயணம். தினந்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ளும் அன்பர்கள், நாள் முழுமையும் சுறுசுறுப்பும், உத்வேகத்துடனும் காணப்படுகின்றார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே !! ஆயினும் நமது நடை பயணம், செவ்வாய் கிரகத்தில் நடைபெற்றால் எப்படி இருக்கும்?

அங்கு எப்படி போவது ? தங்களின் திகைப்பு எனக்கு புரிகின்றது. அதனைப் போக்கவே இந்த பதிவு.

இணைப்பை  நீங்கள் சொடுக்குங்கள் !! அல்லது இந்த வலை பூவின் கீழே உள்ள குறும்படத்தைச் சொடுக்குங்கள் !!! தற்போது செவ்வாய் கிரகத்தை அடைந்த மின்கலம் மார்ஸ் ரோவர்  (கியூரியாசிட்டி) தங்களின் வழிகாட்டியாக உதவுகின்றது. காண்போமா !! நாமும் செவ்வாய் கிரகத்தை நமது நடை பயணம் மூலமாக !!!


செவ்வாய் கிரகத்தில் நடந்து செல்லும் அனுபவத்தை பெற - ஊடாடு அகலப் பரப்பு காட்சி (Interactive Panorama) செவ்வாய் கிரகத்தில் நடந்து செல்லும் அனுபவத்தை பெறுவதற்கு 360 பாகையில், இனிய நண்பர்களே!! நாமும்தான் நடப்போமே !! செவ்வாய் கிரகத்தில் !! 

ஊடாடு அகலப் பரப்பு காட்சியை (interactive Panorama) உருவாக்கியுள்ளார் புகைப்படப் பிடிப்பாளர் Andew Bodrov. மார்ஸ் ரோவரிலிருந்து பெற்றுக்கொண்ட புகைப்படங்களை வைத்து இன்னும் சில மாற்றங்களையும் சேர்த்து interactive Panorama உருவாக்கியுள்ளனர். Curiosity rover தரையிறங்கிய இடத்தை இணையத்தின் மூலம் நீங்களும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிடலாம்.

ஸ்பிரிட் விண்வண்டி

இனி செவ்வாய்க்கிரகம் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.
சூரியனிடம் இருந்து அமைந்துள்ள அதிகபட்சதூரம்-249 209 300 Km அல்லது 1.665 861 AU
2.
சூரியனிடம் இருந்து அமைந்துள்ள குறுகியதூரம் - 206 669 000 Km அல்லது 1.381 497 AU
3.
தனது அச்சில் சரிவு - 25.19 பாகை
4.
தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 24.6229 புவி மணித்தியாலங்கள்
5.
சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் - 686.98 நாட்கள்
6.
சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் - 24.1309 Km/s
7.
கோளின் விட்டம் மையக் கோட்டினூடாக - 6794.4 Km
8.
மேற்பரப்பளவு - 144 மில்லியன் Km2
9.
திணிவு - 6.4191 * 10 இன் வலு 23 Kg
10.
சராசரி அடர்த்தி - 3.94 g/cm3
11.
மேற்பரப்பு ஈர்ப்பு சக்தி - 3.71 m/s2
12.
தப்பு வேகம் - 5.02 Km/s
13.
மேற்பரப்பு வெப்பநிலை - குறுகியது 133K மத்திய 210K அதிக 293K

செவ்வாயின் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதங்கள்


1.
காபனீரொட்சைட்டு - 95.32%
2..
நைதரசன் - 2.7%
3.
ஆர்கன் - 1.6%
4.
ஒக்ஸிஜன் - 0.13%
5.
நீராவி - 0.03%
6.
ஓசோன் - மிகக் குறுகியளவு



மீண்டும் சந்திப்போம் !! அறிவியல் அறிந்துகொள்வோமே பதிவினில்-
அன்புடன் 
அண்ட்.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet

No comments:

Post a Comment