WEB LINK

Sunday, September 9, 2012

அறிவியல்-வானியல்-பிரபஞ்சத்தின் அழிவு

பிரபஞ்சத்தின் முடிவு
சென்ற தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் இன்றைய நிலை தொடர்பாக பார்த்தோம். இது வரை பிரபஞசத்தின் தோற்றத்தை அணுக்கள் மற்றும் மூலக்கூறு ரீதியாக ஆராய்ந்தோம். பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு பெரு வெடிப்பு கோட்பாடு பிரதானமாக இருப்பதைப் போன்று இப்படித்தான் அதன் அழிவும் இருக்கும் என நிர்ணயிக்கும் உறுதியான ஒரு கோட்பாடு பிரபஞ்சத்தின் முடிவுக்கு கிடையாது.
பிரபஞ்சத்தில் உள்ள சடமும் சக்தியும் ஒன்றுடன் ஒன்று தாக்கமுற்ற வண்ணம் புதிது புதிதாக உருமாறி விரிவடைந்து கொண்டே வரும் நிலையில் அதன் முடிவுக்கும் இவை ஏதோ ஒரு வகையில் நிலை மாற்றமைடைந்து பல எதிர்வு கூறல்களுக்கு வழி சமைக்கின்றன.

இது வரை வானியல் அறிஞர்களால் இணங் காணப்பட்ட பிரபஞ்ச முடிவுக் கோட்பாடுகளை ஒழுங்கு படுத்தினால் அவை இவ்வாறு அமையும்

1.பெரிய உறைவு - big freeze
2.
பெரிய உடைவு - big crunch
3.
பெரிய உதறல்  - big rip
4.வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை - vacum metastability
5.வெப்ப இறப்பு  - heat death

பிரபஞ்சத்தின் அழிவு அதில் செறிந்துள்ள சடப்பொருளின் அடர்த்தி வேறுபாடு குறித்தே அடையாளப் படுத்தப் படுகின்றது. மேலே கூறப்பட்ட அழிவு வகைகளில் ஐன்ஸ்டீன் உட்பட பெரும்பாலான அறிவியலாளர் களால் ஒத்துக் கொள்ளப்பட்டது பெரிய உறைவு எனும் குளிரினால் பிரபஞ்சம் உறைந்து போய் அழிவைச் சந்திக்கும் என்பதே ஆகும். இவ்வகை அழிவே மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் நிகழக்கூடியது அதாவது இன்றிலிருந்து 10 இன் 14ம் அடுக்கும் அதற்கு பிந்தியதுமான காலம் கழிந்த பின்னர் ஏற்படக் கூடியது. 

இக்காலப் பகுதியில் நட்சத்திரங்களில் காணப்படும் எரிபொருள் யாவும் எரிந்து தீர்ந்து போய் விடும் எனவும் பிரபஞ்சம் இருளடையும் எனவும் கூறப்படுகின்றது. 10 இன் 34ம் அடுக்கு காலம் வரை இது தொடரும். இதன் பின்னர் ஹாவ்கிங் கதிர்வீச்சு வீதப்படி கருந்துளைகளும் காலக்ஸிகளும் ஆவியாகத் தொடங்கும். இதன் விளைவாக லெப்டோன் மற்றும் போட்டோன் ஆகிய நிறையற்ற துணிக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ள சடப் பொருளாக பிரபஞ்சத்தில் காணப்படும்.

மேலும் எலெக்ரோன்கள் போட்டோன்களாக நிலை மாறுவதால் கதிர்வீச்சு மிகவும் வீழ்ச்சி அடைந்து சடப் பொருட்கள் யாவும் உறைந்து போகும்.

பெரிய உறைவில் பிரபஞ்சத்தின் பொருள் முழுவதும் சிக்க முன்னரே அதாவது இன்றிலிருந்து 100 பில்லியன் வருடங்களுக்கு பின்னர் பெரிய உடைவு எனும் அழிவை பிரபஞ்சம் எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகின்றது. இதன் போது ஊசலாடும் பிரபஞ்சம் எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது அதிகரிக்கும் வேகத்தில் (ஆர்முடுகலில்) பிரபஞ்சம் விரிவடைய காரணமாக உள்ள டார்க் எனெர்ஜி எனும் கருஞ்சக்தி ஒரு கட்டத்தில் நின்று மறு பக்கம் திரும்பும் எனவும் இதனால் பிரபஞ்சம் சுருங்கி சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும் இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது. 

அவதான ரீதியான இக்கருத்துக்களைப் பல அறிவியலாளர்கள் ஏற்பதில்லை எனவும் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரிக்குக் வகையில் இதன் விரிவு மேலும் தொடரும் எனவும் உறுதியான ஆதாரங்களுடன் பெரிய உடைவு கருதுகோளை அவர்கள் மறுத்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

அடுத்ததாக
பெரிய உதறல் கருதுகோளை நோக்குவோம். இன்றிலிருந்து 20 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் இது நிகழும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதன் போது டார்க் எனெர்ஜி எனும் கரும் சக்தி உக்கிர மடைந்து பேய் சக்தி எனப் பொருள்படும் பாண்டம் எனெர்ஜியாக மாறி பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் ஈர்ப்பு விசையினின்றும் விலகி உதறப் படுகின்றன.

அதாவது காலக்ஸிகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் என்பன ஈர்ப்பு விசையை இழந்து ஒன்றிலிருந்து இன்னொன்று விலகி எறியப்படும். மேலும் எல்லையில்லாமல் இச்சக்தி விரிவடையும் எனக் கூறப்படுகின்றது. இக்கடத்தில் இலத்திரன்கள் அணுக்களை விட்டு விலக்கப்பட்டு ஈர்ப்பு விசை தனியாக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

பிக் ரிப் எனப்படும்
பெரிய உதறல் நிகழ்வதால் பிரபஞ்சத்தின் அடர்த்தி எல்லையில்லாமல் வீழ்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் வெற்றிட அதீத ஸ்திரத் தன்மை ஏற்படுகின்றது. இதன் போது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் ஒளியின் வேகத்துக்கு சமனாகும் எனவும் சடப்பொருட்கள் யாவும் அழிவைச் சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இறுதியாக வெப்ப இறப்பை நோக்குவோம். இன்றிலிருந்து 10 இன் 150 ஆம் அடுக்கு காலத்தின் பின்னர் நிகழும் என எதிர்பார்க்கப்படும் வெப்ப இறப்பு பிரபஞ்சத்திலுள்ள சடப் பொருள் யாவும் தீர்ந்து வெப்ப இயக்க சக்தி மட்டுமே எஞ்சி நிற்பதாகும். 

பெரும்பாலான அறிவியலாளர்களால் இறுதியாக நிகழக்கூடிய அழிவு இதுவென எற்கப்படுகின்றது. பௌதிக இயக்க சக்தி யாவும் தீர்ந்து போன இந்நிலையில் வெப்பம் அதிக அளவான என்ட்ரோபி எனும் கட்டத்தை அடைந்து நிற்கும். இந்நிகழ்வு பற்றி வெப்பவியலின் முதன்மையான விஞ்ஞானியான லோர்ட் கெல்வின் என அழைக்கப்படும் வில்லியன் தொம்சன் முதலில் கருத்து உரைத்திருந்தார்.

இதுவரை பிரபஞ்சத்தின் அழிவு நிகழக்கூடிய சாத்தியங்களை அலசினோம்.
====================================
மீண்டும் சந்திப்போம்... 
 
அன்புடன்...

AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet 

No comments:

Post a Comment