தமிழ்நாடு அறிவியல் இயக்கம்!
அறிவியல் மக்களுக்கே!!
அறிவியல் புதுமை காண்பதற்கே!!!
அறிவியல் விழிப்புணர்வை மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றிடுவோம்!!!
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொது மக்கள், பல்துறை சார்ந்தவர்களை அழைக்கின்றோம் !!!

1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமானது
விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் போன்ற
பல்துறையைச் சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த
32 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து பகுதி
மக்கள் மத்தியிலும் அறிவியல் விழிப்புணர்வை பல்வேறு புதிய
புதிய வடிவங்களில் கொண்டு சென்று பரப்பி வருகின்றோம். தற்சமயம் சுமார் 20,000 உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும்
உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும், நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள்
உள்ளனர். 4,000 - த்துக்கும் மேற்பட்ட சுயசார்பான சரிநிகர் பெண்கள் சுய உதவிக்குழுக்களை தமிழகம் முழுமையும்
உருவாக்கியுள்ளோம்.
கல்வி, அறிவியல் கல்விப் பிரச்சாரம், அறிவியல் வெளியீடுகள், பெண்-ஆண் சமத்துவம், ஆரோக்கியம், வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போன்ற துறைகள் மூலம் அனைத்து வகைகளிலும் அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றோம். மூட நம்பிக்கைகளை ஒழித்திட " மந்திரமா-தந்திரமா" என்ற எளிய அறிவியல் பரிசோதனைகள், "கணக்கும் இனிக்கும்", "ஒரிகாமி காகிதக் கலை", "அறிவியல் பாடல்கள்", "அறிவியல் விளையாட்டுக்கள்" என புதுமையான பிரச்சாரங்களை செய்து வருகின்றோம்.
"துளிர் இல்லம்" என்னும் 500 அறிவியல் மன்றங்களை தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்களிடையே, இளம் வயதிலேயே அறிவியலைப் பரப்பிட, திறம்பட செயல்படுத்தி வருகின்றோம். "துளிர்"மற்றும் "ஜந்தர் மந்தர்" என்ற தமிழ் மற்றும் ஆங்கில வினாடி வினாவை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றோம். அறிவியல் கருத்துக்களைப் பரப்பிட அறிவவியல் சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றோம். மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு எண்ணத்தை வளர்த்திட, "விஞ்ஞானிகளைச் சந்திப்போம்" நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றோம். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு செயல்பாடுகளை நடைமுறையில் செய்திடும், (3) மூன்று மாத ஆய்வுப் பணியாக "தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை (NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS) கடந்த 20 ஆண்டுகளாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் மத்திய அரசின் அறிவியல் - தொழில் நுட்பத் துறையுடன் சேர்ந்து நடத்தி வருகின்றோம். இதன் மூலம், ஆண்டு தோறும் 10,000 - க்கும் மேற்பட்ட குழந்தை விஞ்ஞானிகளை தமிழகத்தில் உருவாக்கி வருகின்றோம்.
கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை உருவாக்க "இளைஞர் அறிவியல் திருவிழா" -வை நடத்தி வருகின்றோம். தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கு "விஞ்ஞானச் சிறகு" என்ற 8 - பக்க செய்தி மடலை மாதந்தோறும் வெளியிடுகின்றோம். ஆண்டுசந்தா ரூ.20 செலுத்தி உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கு, இலவசமாக "விஞ்ஞான சிறகு" அனுப்பி வைக்கப்படுகின்றது. "துளிர்" என்ற அறிவியல் மாத இதழை, கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றோம். இந்த "துளிர்" மாத தனிஇதழ் ரூ.7/- ஆகும். ஆண்டு சந்தா ரூ.75/- ஆகும். ஆங்கிலம் அறிந்தவர்களுக்காக "ஜந்தர் மந்தர்" என்ற ஆங்கில இதழ் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றது. தனிஇதழ் ரூ.15/- ம், ஆண்டு சந்தா ரூ.90/- ம் ஆகும். ஆசிரியர்களுக்காக, "விழுது" என்ற காலாண்டிதழை ரூ.10/- க்கு விற்பனை செய்கின்றோம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிறப்பாக செய்ததற்காக “மத்திய அரசின் விருது” 1994 - ஆம் ஆண்டும், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தினைச் சிறப்பாக செய்தமைக்காக, தமிழக அரசின் “அண்ணா விருது”- ம் வழங்கப்பட்டது. சுமார் 150 - க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிட்டு தமிழகம் முழுமையும் மக்களிடையே கொண்டு சென்று வருகின்றோம்.
ஊர்கூடி அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்களும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராகுங்கள். எங்களின் அறிவியல் இதழ்களை, நூல்களை நீங்களும் வாங்கி மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். அறிவியலால் ஒன்றிணைவோம் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றோம் !!
தலைமை அலுவலகம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம். ( TAMILNADU SCIENCE FORUM - TNSF ) தென்சென்னை மாவட்டம்.
245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086.
தொடர்புக்கு: 28113630 / 9444247658 / 9444453588 / 9941169768
மின்னஞ்சல்: tnsf_chennai@yahoo.co.in, chennaitnsf@gmail.com

Dear sir,
ReplyDeleteit is very nice. I am expecting your updates regularly
Ravikumar
chennai
இனிய நண்பரே! ரவிக்குமார் அவர்களே!!
ReplyDeleteதங்களின் கருத்துப் பதிவிற்கும், வாழ்த்துக்கும் மிக்க வந்தனம். தாங்களும் இந்த வலைபூவினை மேம்படுத்துதல் குறித்து, தகுந்த ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். அன்புடன் கே எம் தர்மா என்று முகநூலில் அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி தர்மலிங்கம்.
நல்ல முயற்சி வரவேற்கிறோம்
ReplyDeleteஇனிய நண்பர் ஞானலிங்கம் அவர்களின் வாழ்த்திற்கு மிக்க வந்தனம் !!!
ReplyDeletehello sir,how am I join our Tamilnadu science academy? plz help and giude me anyboby.. by saravanan teacher.
ReplyDelete