ஒவ்வொரு
துளிர் இல்லமும் அதிகபட்சமாக 25 உறுப்பினர்களை கொண்டதாக இருக்க வேண்டி
உள்ளதால், மேலும் ஆர்வமுள்ள மாணவ மணிகள், தங்களுக்காக ஒரு துளிர் இல்லம்
துவங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்ட படியால், கடந்த
16-08-2012 அன்று குரோம்பேட்டை அறிவியல் இயக்கக்
கிளையின் உறுப்பினர்களும், பேராசிரியர் திரு. கு.ரவிக்குமார் அவர்களும்
மீண்டும் அனைத்து துளிர் இல்ல மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வுகள்: -
நிகழ்வுகள்: -
கடந்த 11-08-2012 - "தாமஸ் ஆல்வா எடிசன் " துளிர் இல்லத்தில் இணைந்த அங்கத்தினர் களையும், புதிதாக இணையவிருக்கும் அங்கத்தினர் களையும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டனர். முதல் பிரிவாக "தாமஸ் ஆல்வா எடிசன் " துளிர் இல்லத்தில், வகுப்புக்கள் IX மற்றும் XI மாணவ மாணவிகளும், இரண்டாம் பிரிவாக வகுப்புக்கள் VI , VII மற்றும் VIII மாணவ மாணவிகளும் அமர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குரோம்பேட்டைக் கிளைத் தலைவர் திரு. மு.சி.பலராமன், இயக்கத்தின் செயலாக்கம் குறித்தும், மேன்மை குறித்தும் உரையாற்றினார்.
பேராசிரியர் திரு.கு.ரவிக்குமார் அவர்கள், தமது சிறப்புரையில், இந்த ஆண்டு நடக்க விருக்கும் "குழந்தைகள் தேசீய அறிவியல் மாநாடு" குறித்து விளக்கங்களையும், இந்த அறிவியல் மாநாட்டில் துளிர் இல்லங்களின் குழுக்கள் சமர்பிக்கும் ஆய்வறிக்கைகளை தேசீய அளவில் பரிசீலிக்கப்பட்டு, தேசீய அளவில் இளம் விஞ்ஞானிகள் சான்றிதழ்கள் மத்திய அரசால் வழங்கப்படுவதையும் குறிப்பிட்டார். இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட தலைப்பு "ENERGY" - "சக்தி / ஆற்றல்" என்பதாகும்.
இந்த தலைப்பின் கீழ் ஆய்வு குழுக்கள் தங்களின் ஆய்வுகளை, வழிகாட்டு ஆசிரியர்களின் அறிவுரையின் படி மேற்கொண்டு தங்களின் இறுதி ஆய்வறிக்கையை, குழு தலைவர் மூலமாக, வழிகாட்டு ஆசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலோடு சமர்க்பிக்கப் படவேண்டும் என்றும் விளக்கி கூறினார். அதற்கு உரிய படிவங்களை, கலந்து கொண்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஆசிரிய பெருமக்களிடம் வழங்கப்பட்டு, ஆய்வறிக்கைகளை சமர்பிக்கும் குழுக்களுக்கு வழிகாட்டுதல் முறைகளையும் விளக்கினார்.
சிறப்பு விருந்தினரும், ஆலோசகரும், தென் சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அங்கத்தினருமான திரு. உதயன் அவர்கள், ஆய்வறிக்கை சமர்பிக்கும் குழுக்களை பதிவு செய்தல், குழுக்களில் ஐந்து மாணவ மாணவிகளுக்கு மிகாமலும், மூன்று மாணவ மாணவிகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் என்றும், இந்த ஆய்வறிக்கை வழிகாட்டி ஆசிரியரின் உதவி மற்றும் ஆலோசனையுடன் இறுதி செய்யப்படுதல் வேண்டும் என்றும், ஆய்வறிக்கை சமர்பிக்கும் இறுதி தேதி மற்றும் விதிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
இரண்டாவது துளிர் இல்லம் பெயர் சூட்டல் : "மைகேல் பாரடே"துளிர் இல்லம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்: செல்வன் M.முகேஷ் (VIII -D)
தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்: செல்வி. K.அனீதா (VIII -A)
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாளர்: செல்வி B.காயத்ரி (VIII -A)
உறுப்பினர்களின் எண்ணிக்கை: 28

கலந்து கொண்ட ஆசிரிய பெருமக்கள்: திரு.ஆர்.எத்திராஜன், திருமதி.எம்.புஷ்பராணி, திருமதி. டி.தெய்வயானை ஆகியோர்.
துளிர் இல்லத்தின் உறுப்பினர் பட்டியல் குரோம்பேட்டை கிளையின் துளிர் இல்லங்களின் தொகுப்பில் காணலாம் !!!
26 அங்கத்தினர்களைக் கொண்ட "தாமஸ் ஆல்வா எடிசன்"துளிர் இல்லத்தின் தலைவர்
செல்வி. K.கவிதா அவர்கள் நன்றி கூற, நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment