WEB LINK

Friday, August 31, 2012

மூன்றாவது துளிர் இல்லம் "தாமஸ் ஆல்வா எடிசன்"-துவக்கம்:11-08-2012


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளை
தாமஸ் அல்வா எடிசன் துளிர் இல்லம் துவக்கம் நாள்: 11-08-2012
----o0o--

கடந்த ஆகஸ்ட் 11 - ஆம் தேதி சனிக்கிழமை காலை 10-30  மணியளவில் குரோம்பேட்டை, நாகல்கேணியில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. T.N. தங்கசேகர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்க அங்கத்தினர்கள் திரு.உதயன், பேராசிரியர் திரு. கு.ரவிக் குமார், குரோம்பேட்டை கிளைத் தலைவர் திரு. மு.சி. பலராமன்,  குரோம்பேட்டைக் கிளைச் செயலாளர் திரு. ம.ஸ்ரீதர், குரோம்பேட்டை கிளை பொருளாளர் திரு. AND.கிருஷ்ண மூர்த்தி, இயற்கை ஆர்வலர் Er. திரு. ஏ.எஸ். சுப்பிரமணியன், அறிவியல் இயக்கப் பாடகர் திரு.எ. இளங்கோவன், திரு. கோ. பிச்சை வள்ளிநாயகம், திரு.B.சதீஷ், திரு. PL .சிதம்பரம், தாம்பரம் கிளையின் - திரு.சி.பி.இராமச்சந்திரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 
சிறப்பு விருந்தினர்களின் எண்ணிக்கை 15. ஆசிரியர்களின் எண்ணிக்கை : 09  மாணவ மணிகளின் எண்ணிக்கை : 26. வந்திருந்த அனைவருக்கும், பள்ளியின் சார்பாக சிறப்புத் தேநீரும், பிஸ்கட்டுக்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வுகள்: -

அறிவியல் பாடல்கள் .: திரு. எ.இளங்கோவன் அவர்கள்.
 
நல்வரவு கூறல் மற்றும் தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்துதல்: திரு. மு.சி. பலராமன் அவர்கள்.
 
தலைமை ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கல்.....: திரு. எ.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள்.
 
அறிவியல் சிந்தனைக் குறித்து சிறப்புரை.....: பேராசிரியர். திரு. கு.இரவிக்குமார் அவர்கள்.
 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள் குறித்து...: திரு. உதயன் அவர்கள்.

துளிர் இல்லம் பெயர் சூட்டல் .: " தாமஸ் ஆல்வா எடிசன் " துளிர் இல்லம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்:  செல்வி. K. கவிதா (பதினோராம் வகுப்பு)
தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்:
செல்வி. S .தீபா  (ஒன்பதாம் வகுப்பு)
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாளர்: செல்வன் D.ஜான்  (பதினோராம் வகுப்பு)
 
துளிர் இல்லத்தின் உறுப்பினர் பட்டியல் குரோம்பேட்டை கிளையின் துளிர் இல்லங்களின் தொகுப்பில் காணலாம் !!!

நிகழ்வின் முடிவில் அறிவியல் பாடகர் திரு. எ.இளங்கோவன் அவர்களுடன் மாணவ மணிகளும் இணைந்து பாட, 
"தாமஸ் ஆல்வா எடிசன்"துளிர் இல்லத்தின் தலைவர் செல்வி. K.கவிதா அவர்கள் நன்றி கூற, 
நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

மீண்டும் சந்திப்போம் .........

அன்புடன்..........
AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet .

No comments:

Post a Comment