கூட்ட நடவடிக்கைகள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் சார்பாக மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், பொது மக்கள் ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து விடுபடவும் வேண்டி ஒரு நிகழ்வு நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 15-08-2010 - அன்று மாலை சுமார் 5-00 மணி அளவில் பி.பி.ஆர். நலசங்கத்தின் பூங்காவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அங்கத்தினர் திரு. சேதுராமன் அவர்களைக் கொண்டு " மந்திரமா - தந்திரமா " என்ற தலைப்பின் பலவித வினோத நிகழ்வுகளை நடத்திக் காட்டினர்.
மக்களிடையே உள்ள நம்பிக்கைகளை மூலதனமாகக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் செய்கின்ற சில பல ஏமாற்று வேலைகளை விளக்கி, அச்செயல்களை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும், இவைகள் அனைத்தும் தந்திரங்களும், செய் முறைப் பயிற்சியுமே காரணம் என்றும் விளக்கி பேசிய திரு சேதுராமன் அவர்கள் பலவித செயல்பாடுகளை அனைவரின் முன்னிலையில் செய்து காட்டி, இனிமேலும் இது போன்ற ஏமாற்று வேலைகளை கண்டு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்திற்கு இயக்க கிளை உறுப்பினர்களும், தென்சென்னை இயக்க அங்கத்தினர்களும், திரளான பொது மக்களும் வந்திருந்து சிறப்பித்தனர். திரு. உதயன், பேராசிரியர். திரு.கு. ரவிக்குமார், திருமதி,மோகனா, திரு. எ.இளங்கோவன், திரு. ராமலிங்கம் (தாம்பரம் கிளை), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கிளையின் தலைவர் திரு. மு.சி.பலராமன் முன்னதாக அனைவரையும் வரவேற்று, இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். திரு. எ.இளங்கோவன் அறிவியல் பாடல்களைப் பாட, திரு. உதயன் மற்றும் பேராசிரியர் திரு.கு.ரவிகுமார் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் செயலாளர் திரு. ஆர்.ஜெயராமன் நன்றி கூற நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது.
மீண்டும் சந்திப்போம் !! அடுத்த செயலாக்கப் பதிவினில்....
அன்புடன்....
AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet
No comments:
Post a Comment