WEB LINK

Tuesday, August 28, 2012

TNSF/CHROMEPET கூட்டம் நாள் 26-02-2012 செயலாக்கம் - 6


கூட்ட நடவடிக்கைகள்: நாள்: 26-02-2012

தமிழ்நாடு அறவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் மாதாந்திரக் கூட்டம்  கடந்த 26-02-2012 அன்று நல்லப்பா தெருவின் கதவு இலக்கம் 22, கிளையின் ஆலோசகர் திரு எ.எஸ்.சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்தில் கூட்டப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்டோர்:

சிறப்பு  விருந்தினர்... ..... திரு. உதயன் அவர்கள்,

கிளைத்தலைவர்.............திரு மு.சி.பலராமன் அவர்கள்,
கிளை செயலாளர்.......... திரு.ஆர்.ஜெயராமன் அவர்கள்,
கிளைப் பொருளாளர்.... திரு. ஈ.ஜெயந்த் அவர்கள், 

கிளையின் ஆலோசகர்கள்:
திரு.எ.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் தா.பி.வரதராசன் அவர்கள்.

உறுப்பினர்கள்.
எ.இளங்கோ அவர்கள்,
ம.ஸ்ரீதர் அவர்கள்,
வீ.ரவி அவர்கள்,
டி.ரமேஷ் அவர்கள்,
வீ.குப்புசாமி அவர்கள்,
AND.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
B.சதீஷ் அவர்கள்,

கூட்டத்தில் காலந்தாய்வு செய்யப்பட்ட நிகழ்வுகள்:
அறிவியல் பாடகர் திரு. எ.இளங்கோ அவர்கள் அறிவியல் பாடல்கள் பாட கூட்டம் துவங்கியது.
1. பிப்ரவரி 28 -- அறிவியல் இயக்க தினம் குறித்து
2. தேசிய கணித ஆண்டு நிகழ்வுகள் குறித்து.
3. இது வரையிலும் செயல்படுத்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து.
4.  எதிர்காலத்தில் செயல படுத்தப் படவேண்டிய நிகழ்வுகள் குறித்து.
5. இதர நிகழ்ச்சிகள் குறித்து.
மேலே கண்ட தலைப்புக்களில் விவாதங்கள் மேற்கொள்ளப் பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  
தீர்மானங்கள்:
1. 10-03-2012 சனிக்கிழமை அன்று மாலை 5-00 மணி முதல் 7-30 மணி வரையில் ஒரு பொதுக் கூட்டம் கூட்டுதல். பெராசியிரர் திரு. கு.ரவிக்குமார், வைஷ்ணவா மகளிர் கல்லூரி கணித மாணவி மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோரை அழைத்தல்.

2. வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடைபெறும் தினத்தில் வான் நோக்கு நிகழ்ச்சி நடத்த ஆவன செய்தல்.

3. கோடை விடுமுறையில் துளிர் இல்ல மாணவ மாணவியருக்கு - 
"கோடை அறிவியல் விழா" நடத்துதல்.

4.ஒவ்வொரு மாதமும் துளிர் மாத இதழ்(தமிழ் பதிப்பு) 25 எண்ணிக்கைப் பெற்று விநியோகம் செய்தல்.

5.ஒவ்வொரு மாதமும் ஜந்தர் மந்தர் (ஆங்கிலப் பதிப்பு) 5 எண்ணிக்கைப் பெற்று விநியோகம் செய்தல்.

6. VHS மருத்துவமனை - குறித்த செய்திகள் விபரம்.

மேற்கண்ட தீர்மானங்களை  நிறைவேற்றிய பின்னர் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

மீண்டும் சந்திப்போம்....  

அன்புடன் .....

AND. கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet

No comments:

Post a Comment