WEB LINK

Tuesday, August 28, 2012

TNSF/CHROMEPET கூட்டம் - நாள் :10-07-2010

 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முந்தய கூட்ட நடவடிக்கைகள்:நாள் :10-07-2010

கடந்த 2010 ஜூலை மாதம்  10-ஆம் நாள், காலை 10 மணியளவில்,
தென்சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிமுகமாக பி.பி.ஆர் நலசங்க திருமண மாளிகையில் ஒரு கூட்டம் நடத்தப் பட்டது. திரு. எ.இளங்கோ அவர்களால் அறிவியல் இயக்கப் பாடல்கள் பாடப்பட்டது.

அறிவியல் இயக்கத்தின் குறிகோளும் நடவடிக்கைகளும் குறித்து திரு. உதயன் அவர்கள்  ஒரு சிறப்பு சொற்பொழிவும், தொடர்ந்து தாம்பரம் தென்சென்னை, கிருத்துவக்கல்லூரி தாவரவியல் விஞ்ஞானி, பேராசிரியர். டாக்டர் திரு. தயானந்தன் (பணி ஓய்வு) அவர்கள் முன்னிலையில்  " டார்வின் 200 " என்ற ஒரு சிலைடு ஷோ  காட்சி  நடத்தப்பட்டது.  பேராசிரியர் டாக்டர் திரு. தயானந்தன் அவர்கள், சுற்றுச் சூழல் காத்தல், பூமி உஷ்ணமடைதல், மரவளர்ப்பு போன்று பல கருத்துக்களையும் தனது சிறப்பு உரையில் எடுத்துரைத்தார்.

இக்காட்சிக்கு சுமார் 100  பார்வையாளர்களுக்கு மேல் கலந்து கொண்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈடுபாடுகளையும், செயலாக்கத் தையும் அறிந்து கொண்டு, " டார்வின் 200 "  என்னும் சிலைடு ஷோ வையும்  கண்டு களித்தனர்.   திரு. மு.சி. பலராமன், (தலைவர், பி.பி.ஆர் நலசங்கம் ) மக்களிடையே விழிப்புணர்வு பெருக வேண்டியது குறித்தும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார். அதற்கு தேவையான விண்ணப்ப படிவங்களும், இணைய விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.


கலந்து கொண்ட அனைவருக்கும், தேநீர் மற்றும் பிஸ்கட்டுக்கள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அங்கத்தினர்களுக்கும், திரு. மு.சி. பலராமன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. 

மீண்டும் சந்திப்போம் !! அடுத்த செயலாக்கம் பதிவினில்....

அன்புடன் 
AND. கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet  

No comments:

Post a Comment