WEB LINK

Wednesday, August 29, 2012

TNSF/CHROMEPET-செயலாக்கம் -5- 28-08-2010


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முந்தய கூட்ட நடவடிக்கைகள்
நாள்: 28-08-2010

கடந்த 07-08-2010 அன்று நடந்த அறிவியல் விழிப்புணர்வு கூட்டத்தில் இயக்கத்தின் குரோம்பேட்டைக் கிளை தலைவர் திரு. மு.சி. பலராமன், தனது சிறப்புரையில் " பூமி கொதிக்கின்றது" என்று பல கருத்துக்களை எடுத்து வைத்தார். 

அதன் அடிப்படையில் நாம் தற்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து விவாதித்த பின் மேலும் ஒரு அறிவியல் விழிப்புணர்வு கூட்டம் "பூமியைக் குளிர வைப்போம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அத்துறையில் முக்கியமான சிலரைக் கொண்டு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு அறிவியல் இயக்க தென் சென்னையின் துணைத் தலைவர் திரு.உதயன் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக திரு. எஸ்.விஜயக்குமார், B.Sc.,(விவசாயம்), ஆணையர் பல்லவபுரம் பேரு நகராட்சி அவர்களும், சிறப்புரை ஆற்ற இயற்கை ஆர்வலர் திரு. எஸ்.இந்திரகுமார் (பம்மல்) அவர்களும் இசைந்த நிலையில், கடந்த  28-08-2010 அன்று காலை 10-00 மணியளவில் பி.பி.ஆர் நலசங்க திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும்  திரு. மு.சி.பலராமன் (கிளைத் தலைவர்) வரவேற்பு கூறி வரவேற்றார்.

நிகழ்வுகள்: 

வரவேற்புரை....:.திரு.மு.சி.பலராமன் (குரோம்பேட்டைக் கிளைத்தலைவர்) 

அறிவியல்  பாடல்கள்: திரு. ஏ.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் மற்றும் அறிவியல் பாடகர்..

இயக்கம் குறித்து உரை: திரு.உதயன் அவர்கள், து.த.தென் சென்னை இயக்கம்.

சுற்றுச் சூழல் குறித்து சிறப்புரை: திரு.எஸ்.விஜயகுமார், ஆணையர் பல்லவபுரம் பெருநகராட்சி.

"பூமியைக் குளிர வைப்போம் " சிறப்புரை: இயற்கை ஆர்வலர் திரு.இந்திரகுமார் (பம்மல்) அவர்கள்.

கலந்து  கொண்ட அனைவரும் ஆவலுடன், எதிர் கொண்ட "மர நடுவிழா " நடைபெற, 

நன்றியுரை: திரு. ஆர்.ஜெயக்குமார், கிளைச் செயலாளர். 

மீண்டும்  சந்திப்போம்  அடுத்த செயலாக்கப் பதிவினில்...


அன்புடன் .......

AND.கிருஷ்ணமூர்த்தி  /  tnsfchromepet


No comments:

Post a Comment