தமிழ்நாடு அறிவியல் இயக்கம் !!!
அறிவியல் மக்களுக்கே!!
அறிவியல் புதுமை காண்பதற்கே!!! -------------------------------------------
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளையின் முதல் கூட்டம் கடந்த 24-04-2011 அன்று காலை 10-00 மணியளவில் துவங்கியது.
நிகழ்வுகள்:-
வரவேற்புரை...........................: திரு. ஆர்.ஜெயராமன் அவர்கள்.
அறிவியல் பாடல்கள்.........: திருமதி. பிரேமா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் திரு.எ.இளங்கோ அவர்கள்.
"கணக்கும் இனிக்கும்" என்ற தலைப்பில் விளக்கம் மற்றும் உரை..: திரு உதயன் அவர்கள்.
" அறிவியல் இயக்கம் ஒரு மக்கள் இயக்கம்"
சிறப்புரை.: திரு. பி.இராமலிங்கம் அவர்கள், தலைவர், தென் சென்னை .
இக்கூட்டத்தில், CES நடுநிலைப் பள்ளி , NSN மேல்நிலைப் பள்ளி, விவேகானந்த உயர்நிலைப் பள்ளி , M.H.SCHOOL(ஹஸ்தினாபுரம்), கேந்திரிய வித்யாலயா (மீனம்பாக்கம்) மற்றும் ஜமீன் ராயப்பேட்டை பல்லவபுர நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 26 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
26 - மாணவ மணிகளிடையே "துளிர் இல்லம்" முதலாவதுக் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவிற்கு "கல்பனா சாவ்லா" துளிர் இல்லம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு தென்சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் மற்றும் அங்கத்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவ மணிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட (80) என்பது பேர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கல்..: திரு.எ.எ.முருகேசன், ( MC ) பல்லவபுரம் நகர மன்ற உறுப்பினர் அவர்கள்.
மதிய உணவிற்குப் பின் நிகழ்வுகள் தொடங்கப்பட்டன:
"ஒரிகாமி" காகிதக் கலை: திரு. ஜெகதீசன் மற்றும் செல்வி. மோகனா அவர்கள்.
"அறிவியல் சோதனைகள்" .......................: திரு. மு.சி.பலராமன் அவர்கள்.
"நன்றி நவிழல்"..................................................: திரு. இ. ஜெயந்தன் அவர்கள்.
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
-------------------------------------------------------------------------------------------------------------------
முதலாம் துளிர் இல்லம் குழுவின் விபரங்களை " துளிர் இல்லம்" என்ற தலைப்பின் கீழ் காணலாம்.
No comments:
Post a Comment