WEB LINK

Monday, August 20, 2012

அறிவியல் ஆய்வுப் பயணம் - 19-05-2012 செயலாக்கம்-1


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்!
அறிவியல் மக்களுக்கே!! 
அறிவியல் புதுமை காண்பதற்கே!!!
--------------------------- 
நாள்: 19-05-2012
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குரோம்பேட்டை கிளையின் கீழ் அமைக்கப்பட்ட துளிர் இல்லங்களில் "கல்பனா சாவ்லா" துளிர் இல்லம் மற்றும் "சர் ஐசக் ந்யூட்டன்" துளிர் இல்லம் அங்கத்தினர்கள் அனைவரும் அறிவியல் அறியவேண்டி ஒரு அறிவியல் பயணம் மேற்கொள்ளப் பட்டது.

 நீர் ஆதாரம்  குறைந்து வரும் இக்கால கட்டத்தில்  கடல் நீர், மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு, அனைத்து அங்கத்தினர்களையும், இயக்கத்தின் குரோம்பேட்டைக்  கிளையின் செயலாளர் திரு.ம.ஸ்ரீதர், தலைவர் திரு. மு.சி.பலராமன் மற்றும் இயக்க அங்கத்தினர்களால்  பாதுகாப்பாக இரண்டு டெம்போ டிராவலர் மற்றும் 
இரண்டு டாடா சுமோக்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். 

காலை 9-00 மணிக்கு அனைவரும் வருகை தந்தபின்பு, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு அறிவியல் பயணம் துவங்கியது. நிறுவனத்தை அடைந்தவுடன் அருகில் அமைக்கப் பட்டிருந்த பூங்காவில் அனைவரும் அமர்த்தப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பிஸ்கட்டுக்கள் வழங்கப்பட்டது. 

இந்த அறிவியல் பயணத்திற்கு, இயக்கத்தின் குரோம்பேட்டைக் கிளையின்  செயல் உறுப்பினர் திரு PL. சிதம்பரம் அவர்கள், நிறுவனத்தினரிடம் கலந்து ஒப்புதலும், கலந்து கொண்டவர்களுக்கு அருமையான மதிய உணவுடன், நிறுவன தொழில் செயல்பாடுகளை விளக்க  அதிகாரிகளையும் ஏற்பாடு செய்து தந்திருந்தார். நிர்வாகத்தின் அதிகாரி அவர்கள், சுத்திகரிப்பு முறை, சுற்றுச்சூழல் காத்தல், நீர் ஆதாரம் பற்றாக்குறை போன்று பல அறிய வேண்டிய அறிவியல் கருத்துக்களை விரிவாக விளக்கிப் பேசினார்.

 




























தரைதளத்தில் உள்ள இயந்திரங்களைக் கண்டு விளக்கங்களைப் பெற்ற பின்பு, அனைத்து சிறு குழுக்களும் நிறுவனத்தின் ஏழாவது மாடியின் மீது அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் அதன் செயல் விளக்கங்களுடன் காண சென்றனர்.

அங்கும் ஒரு பொறியாளர் விளக்கங்களை கொடுத்து அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார். அனைத்து மாணவர்களும், உடன் வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் இயக்கத்தின் குரோம்பேட்டைக் கிளையின் உறுப்பினர்களும் இந்த அறிவியல் பயணத்தை மிகவும் ரசித்து மகிழ்ந்தனர்.  
பின்னர் அறிவியல் பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பாக மனித வள மேம்பாட்டு அதிகாரி அவர்களால் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவை ரசித்து, ருசித்த அனைவருக்கும் மேலும் மகிழ்வு கூட்டும் வகையில் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிர்வாக அமைப்பு, செயலாக்கம், சுற்று  சூழல் காத்தல் போன்று பல கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தார். துளிர் இல்ல அங்கத்தினர் களும், இயக்கத்தின் உறுப்பினர்களும் கேட்ட சந்தேகங்களுக்கும் தகுந்த விளக்கங்களை வழங்கினார்.  

இயக்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கும், பொறியாளர்களுக்கும், தலைவர் திரு.மு.சி.பலராமன் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, திரு பி.எல்.சிதம்பரம் அவர்கள் நன்றி கூற , நிர்வாக தலைமை செயல் அதிகாரி கலந்து கொண்ட  அனைவருக்கும் நினைவுப் பரிசுகள், இனிப்புக்கள்  ஐஸ்கிரீம் ஆகியவைகள் வழங்கி, வருங்கால விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தார். 

அறிவியல்  பயணம் இனிதே நிறைவடைந்தது.

மீண்டும்  சந்திப்போம் !!! 
அன்புடன் கிருஷ்ணமூர்த்தி தர்மலிங்கம்.
(tnsfchromepet/Treasurer.)

2 comments:

  1. பயனுள்ள ஏற்பாடும் சந்திப்பும்..பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
  2. இனிய நண்பரே சுவாமிநாதன் முருகவேல் அவர்களே! தங்களின் கருத்துப் பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க வந்தனம். அன்புடன் கே எம் தர்மா..

    ReplyDelete