WEB LINK

Friday, August 31, 2012

இரண்டாவது துளிர் இல்லம் துவக்கம்- 12-02-2012-"சர் ஐசக் நியூட்டன்"


"சர் ஐசக் நியூட்டன் "துளிர் இல்லம் துவக்கம் 
மற்றும் கூட்ட நடவடிக்கைகள்
நாள்: 30-01-2012 & 12-02-2012.

நீண்ட நாள் தொய்வுக்குப்பின் மீண்டும் நமது அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளைக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும், விழிப்புணர்வு பிரச்சாரம் பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று கருதப்பட்டதால் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் துளிர் இல்லங்களை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாகிலும் கூட்டம் கூட்டுதல் ஆகியன இயக்க கிளை உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் விளைவாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குரோம்பேட்டை கிளை, நேரு நகர் நல்லப்பா தெருவில் புதிதாக " சர் ஐசக் ந்யூட்டன் "துளிர் இல்லம் துவக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, துளிர் இல்ல உறுப்பினர்களை ஒருங்கிணைக்க திரு. ம.ஸ்ரீதர் அவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

 கடந்த 12-02-2012 அன்று புதிய துளிர் இல்லம் துவக்கப்பட வேண்டி, மாணவ மணிகளுக்கு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டு காலை 10 -00 மணி அளவில் தென் சென்னை இயக்கத்தின் திரு உதயன், பேராசிரியர் திரு. கு.ரவிக்குமார், அறிவியல் பாடகர்கள் திரு. எ.இளங்கோ மற்றும் திருமதி மோகனா, திரு மு.சி.பலராமன் (கிளைத் தலைவர்), திரு.எ.எஸ்.சுப்பிரமணியன் (ஆலோசகர்), திரு.தா.பி.வரதராசன் (ஆலோசகர்), செயற்குழு உறுப்பினர்கள் திரு.கோ.பிச்சை வள்ளிநாயகம், திரு.PL.சிதம்பரம், திரு. AND.கிருஷ்ணமூர்த்தி, திரு. எஸ்.ரவி, திரு. V.ரவி மற்றும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், நல்லப்பா தெரு குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்களும் அசோகா அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் கூடினர். 

நிகழ்வுகள்: 
வரவேற்புரை: ................................கிளைத் தலைவர் திரு. மு.சி.பலராமன்.
அறிவியல் பாடல்கள்:.... திரு. எ.இளங்கோ மற்றும் திருமதி. மோகனா.
கணக்கும் இனிக்கும்: சிறப்புரை :பேராசிரியர் திரு. கு. ரவிகுமார்.
இயக்கம் குறித்து விளக்க உரை ...............: திரு. உதயன் அவர்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுக்கள் வழங்கல்.

புதிய துளிர் இல்லம் துவக்கம்:

துளிர் இல்லம் உறுப்பினர்கள் இணைத்தல்.( 21 உறுப்பினர்கள் )
துளிர் இல்லம் பெயர் சூட்டுதல்: "சர் ஐசக் நியூட்டன் " துளிர் இல்லம்.
துளிர் இல்லம் தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுத்தல்.
தலைவர்: செல்வன் ஐசக் ஜோசப், 
செயலாளர்: செல்வி ஐஸ்வர்யா 
பொருளாளர்: செல்வி சுசீலா செரீன்.

அறிவியல் சோதனைகள் : திரு. மு.சி.பலராமன் அவர்கள்.

காகிதக் கலை (ஒரிகாமி): திருமதி. மோகனா அவர்கள்.

நன்றி நவிழல்: திரு.எ.இளங்கோ அவர்கள்.

நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது. 

மீண்டும் சந்திப்போம் .........

அன்புடன்..........

AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet .

No comments:

Post a Comment