தேசிய
அறிவியல் தின விழா
தேதி: 28-02-2013
அன்புடையீர்,
இன்றைய
தினம், 28-02-2013 காலை 10
மணியளவில், தென்சென்னை அறிவியல் இயக்கம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக,
புருஷோத்தமநகர் நலசங்க கட்டிடத்தில், அறிவியல் தினம் விழா, இயக்கத்தின் அறிவியல்
பாடகர் திரு. இளங்கோ அவர்களின் அறிவியல் பாடலுடன் துவங்கி, இயக்கத்தின்
குரோம்பேட்டை கிளைத் தலைவர் திரு. சி. பலராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவினை துவக்கி வைத்து திரு.ப.தன்சிங், பல்லவபுரம் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும்
பல்லவபுரம் நகராட்சி தலைவர் திரு. ஏ.கே.எம்.நிஜார், துணைத் தலைவர் திரு.
த.ஜெயபிரகாஷ், நகராட்சி ஆணையர், தென்சென்னை அறிவியல் இயக்கம் தலைவர்
திரு.சி.ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அறிவியல்
இயக்கத்தின் குறிக்கோள் மற்றும் மேம்பாடு குறித்து, இயக்கத்தின் செயலாளர் திரு.
ஜெகதீசன் மற்றும் மாநில துணைத் தலைவர் திரு செந்தமிழ் செல்வன் ஆகியோர் விளக்க உரை
ஆற்றினர்.
குரோம்பேட்டை
பகுதியின் 1) பல்லவபுரம் நகராட்சி மேல்நிலை பள்ளி, ஹஸ்தினாபுரம் சார்பாக ஆசிரியர்கள்
கவிதா, சியாமளா அவர்களின் மேற்பார்வையில் 32 மாணவ மாணவிகளும், 2) நாகல்கேணி, அரசு
நல மேல் நிலைப்பள்ளியிலிருந்து ஆசிரியைகள் புஷ்பராணி மற்றும் நிலா அவர்களின்
மேற்பார்வையில் 12 மாணவ மாணவிகளும், 3) அய்யாசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி, நேரு
நகர்- இருந்து 12 மாணவ மாணவிகளும், 4) சி.இ.எஸ். நடுநிலைப் பள்ளியிலிருந்து
ஆசிரியை மீனா அவர்களின் பாதுகாப்புடன் 23 மாணவ மாணவிகளும் மற்றும் ஆர்வமுள்ள
நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“எனக்குப் பிடித்த
அறிவியல் அறிஞர்”, என்ற தலைப்பில் 40 மாணவர்கள் கலந்து கொண்ட பேச்சுப்
போட்டி மதியம் ஒரு மணியளவில் நிறைவு பெற்றது.
ஒரு
மணியளவில் முடிவடைந்த பேச்சுப் போட்டியைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அனைவருக்கும் திரு.
த.ஜெயபிரகாஷ் நகரமன்ற துணைத் தலைவர் அவர்களால், மதிய உணவு வழங்கப்பட்டு, மீண்டும்
விழா ஒரு அறிவியல் காணொளியுடன் துவங்கியது.
பின்னர்
சர்.சி.வி.இராமன் குறித்த ஒரு விளக்கப் படமும், அதையொட்டி பேராசிரியர்
திரு.இரவிக்குமார் அவர்கள் உத்வேகம் அளிக்கும் விரிவுரையை கலந்து கொண்ட அனைவரும்
வியக்கும் வண்ணம் வழங்கினார்.
சுமார் 40
மாணவ மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட, அறிவியல் அறிஞர்களைப் பற்றி
பேசிய மாணவ மாணவிகளில், சிறந்த முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு,
நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகளை திரு.சந்திரசேகர் 21
வார்டு நகரமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கப்பட்டன.
மேலும்
மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற ஓவிய, கட்டுரை, ஆசிரிய பெருமக்களின் ஆய்வு கட்டுரை
படைப்புக்களை தென்சென்னை செயலர் திரு ஜெகதீசன் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
இறுதியாக
மாணவ மாணவிகள் பாடிய அறிவியல் பாடல்களுடன், நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு
பெற்றது.
இவ்விழாவின்
நிகழ்வுகள் காண சொடுக்குக: http:tnsfchromepet.blogspot.in
தொடர்பு:
கிருஷ்ணமூர்த்தி, andkm_1950@yahoo.co.in
நன்றியுடன்,
நல்லதொரு விழா நடத்தினீர்கள். வாழ்த்துக்கள். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் கருத்துப் பதிவிற்கு, மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே! ஜெயச்சர் ராஹவ் அவர்களே!
ReplyDelete