WEB LINK

Sunday, November 11, 2012

இளம் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: சூரிய ஒளி அடுப்பு!!!

சூரிய ஒளி அடுப்பு' கண்டறிந்து சாதனை::  

தேவகோட்டை: மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர். தினமும், 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் பெண்களை அச்சுறுத்துகிறது.இதற்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர். மாணவர்கள் ரஞ்சனி, மணிமாறன், அபினேஷ், அட்சயா, பார்கவி ஆகியோர் ஆசிரியைகள் சண்முகவள்ளி, ஜாஸ்மின் வழிகாட்டுதல்படி, அடுப்பு தயாரித்து உள்ளனர். 
மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர். சமைக்கத் தேவையான பொருளை பாத்திரத்தில் போட்டு, கண்ணாடியால் மூடினர். முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரியஒளி பிரதிபலித்து, அடுப்புக்குள் செல்லும்போது, துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் சமையல், "ரெடி'. முதற்கட்டமாக, மாணவர்கள் அடுப்பில் வெந்நீர், காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர்.

நவ., 18ல் மானாமதுரையில், தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது. அதில், இத்தயாரிப்பு வைக்கப்படும் என, கூறப்பட்டது.


செய்தியினை தந்த தினமலர் இ-பேப்பருக்கு மிக்க வந்தனங்களுடன், இளம் விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களுடன்  மீள் பதிவு செய்யப் பட்டுள்ளது.  

அன்புடன் கிருஷ்ணமூர்த்தி AND /tnsfchromepet

Monday, November 5, 2012

" பாரடே" துளிர் இல்லம் உறுப்பினர்கள் விபரம் !!!

" பாரடே" துளிர் இல்லம் உறுப்பினர்கள் விபரம்.
அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளி,
நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை - 600044.


துளிர் இல்லம் எண்: 04:
உறுப்பினர்கள் எண்ணிக்கை:26

Sunday, November 4, 2012

பிரபல விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர்

விண்வெளியில் சந்திரா


Wednesday, October 19: இன்றைய தினம் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பிறந்த தினம். 1910 ஆண்டு அக்டோப்ர் 19 ந் தேதி பிறந்த அவரது நூற்றாண்டு விழா கடந்த ஆண்டில் கொண்டாடப்பட்டது. அவர் காலமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.  இன்று அவரது பெயரைத் தாங்கிய செயற்கைக்கோள் - சந்திரா - அவரைப் போலவே அயராது உழைத்து வருகிறது.